உள்நாடு

தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள பகுதிகள்

(UTV | கொழும்பு) –  கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், கரையோரம், ஆட்டுப்படித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொட, வாழைத்தோட்டம், மருதானை, புறக்கோட்டை, டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 7 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.

இதற்கமைய, பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுமுல்ல, போகஹவத்த, கிரிமந்துடுவ, கோராவல, அடுலுகம மேற்கு, கலகஹமண்டிய மற்றும் பமுனுமுல்ல முஸ்லிம் கிராம சேவையாளர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்குமென அரசாங்கத் தகவல் திணைக்கள்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 07 பேர் பூரண குணம்

 தப்பிக்க பாய்ந்த இளைஞன் சில்லில் சிக்க்கி பரிதாபமாக உயிரிழப்பு

அரச நிறுவனங்களை இன்று முதல் பரிசோதனைக்கு