உள்நாடு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க சாத்தியம் இல்லை

(UTV | கொழும்பு) –   நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த 4 வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் 18 மணிநேர நீர் விநியோகத்தடை

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

கோப் முதற் தடவையாக ஒன்லைன் முறையில்