உள்நாடு

இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து கடந்த 29ஆம் திகதி வரை 11,056 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி கடந்த 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!

நாடாளுமன்ற கலைப்பு சம்பவம்: தோல்வியடைந்த பசில் திட்டம்

தொழிற்சாலை முகாமைத்துவங்களுக்கு பவி விடுத்துள்ள எச்சரிக்கை