உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – குவைத்திலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் நிமித்தம் திருகோணமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த 52 வயது பெண்ணொருவர் இன்று காலை மரணித்துள்ளார்.

களுத்துறை – பயகலையைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று (24) அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இவரோடு நாடு திரும்பி, முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரு நிபந்தனைகளுக்கு இணங்கினால் வேட்புமனுவை மீளப் பெறத் தயார் – அநுர

மினுவங்கொடை மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

பல்கலைக்கழக அனுமதி முடிவுகள் வெளியாகின