உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 8099 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய தினத்திலும் 435 பேர் தனிமைப்படுத்தல் இராணுவ மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 40 மத்திய நிலையங்களில் 3444 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பசிலிற்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு