உள்நாடு

தனிமைப்படுத்தல் – வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

(UTV| கொழும்பு) – சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க கூறுகின்றார்.

எனினும் சுகாதார தரப்புகளின் அறிவுறுத்தல்களுக்கமைய, குறித்த பகுதிகளில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமையின் கீழ், சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றியே தபால் திணைக்களம் செயற்பட்டு வருவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவிக்கின்றார்.

Related posts

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்

editor

INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி நவம்பர் – BMICH இல்.

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.