(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை எனவும் இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன.
இதற்காக 68 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், நிவாரண பொதிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும்.
13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6,800 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, முடக்க நிலை காரணமாக ஒரு மாத காலத்திற்கு மேலாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை ஆரம்பமாவதாக தெரிவிக்கப்படுகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/10/utv-news-7-1024x576.png)