விளையாட்டு

தனிப்பட்ட காரணங்களுக்காக சமிந்த இராஜினாமா

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தை நேற்று(22) இரவு மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது .

இதனிடையே, தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆலோசர் குழுவிலிருந்தும் தான் விலகவுதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

டெல்லி அணியில் இருந்து அஷ்வின் விலகும் சாத்தியம்

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் மார்க் வுட்