விளையாட்டு

தனது ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கத்தின் விலையை வௌியிட்டார் சுசந்திகா!

(UDHAYAM, COLOMBO) – 2000ம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தாம் வென்ற ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கம் தற்போதைய நிலையில் 25 கோடி ரூபாவுக்கு கோரப்பட்டுள்ளதாக முன்னாள்குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்திருந்தார்.

தனது மோசமான பொருளாதார நிலை காரணமாக தான் தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட தயாராக உள்ளதாக கடந்த 4ம் திகதி சுசந்திகா ஜயசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

உலக சாதனை படைத்த IPL முதல் போட்டி

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து