சூடான செய்திகள் 1

தந்தை தேர்தலில் தோல்வியுற்றதில்லை புதல்வரான நானும் தோற்கப் போவதில்லை

(UTVNEWS | COLOMBO) – தந்தை தேர்தலிலும் தோல்வியுற்றதில்லை புதல்வரான நானும் தோற்கப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,மக்களுக்காகத் என்னை அர்ப்பணிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகிவிட்டேன்.தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் இயற்கை வளங்களைக் கொண்டு பாரியளவிலான கைத்தொழில் முயற்சிகள் முன்​னெடுக்கப்படவில்லை. நாட்டிலுள்ள 332 பிரதேச செயலகங்களிலும் தொழிற்சாலைகள், தொழில்பேட்டைகளை அமைக்க எண்ணியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அபராதத் தொகை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

அனுமதிப்பத்திரமின்றிய பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை…

இன்றைய வானிலை…