உள்நாடு

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்

(UTV | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தண்டப்பணம் மற்றும் விசா கட்டணம் என்பன திருத்தப்பட்டுள்ளன.

புதிய திருத்தத்திற்கு அமைவாக, நாட்டில் விசா இன்றி அல்லது விசா காலப்பகுதிக்கு மேல் தங்கியிருப்பதற்காக, விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலர் அறவிடப்படவுள்ளது.

வதிவிட விசா கொண்ட முதலீட்டாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், மருத்துவ சிகிச்சையை நாடுவோர், அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர், சமய அலுவல்களில் ஈடுபடுவோருக்கு 200 அமெரிக்க டொலர் கட்டணமாக அறவிடப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூலிலாந்து , கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாட்களின் பின்னர் 90 நாட்கள் வரை விசா கட்டணமாக 100 அமெரிக்க டொலர் அறவிடப்படவுள்ளது.

   

Related posts

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு அடுத்த வாரம் – ஜீவன் தொண்டமான்.

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்