சூடான செய்திகள் 1

தட்டம்மை நோய் 700 வீதத்தினால் அதிகரிப்பு…

இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் சர்வதேச ரீதியில் தட்டம்மை நோயானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆபிரிக்காவில் தட்டம்மை நோயானது 700 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தட்டம்மை நோய்த்தொற்று, நுரையீரல் மற்றும் மூளையைப் பாதிக்கும் தீவிர நோய் நிலைமையை உருவாக்கக்கூடியதாகும்.

யுக்ரைன், மடகஸ்கார் மற்றும் இந்தியாவில் தட்டம்மை நோய் அதிகம் பரவி வருவதுடன் மடகஸ்காரில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்

இலங்கையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவலையளிக்கிறது

நாடு திரும்பினார் ஜனாதிபதி