வகைப்படுத்தப்படாத

தட்டம்மை நோயால் 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – நியூஸிலாந்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1051 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்தின் ஒக்லண்ட் பகுதியிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 877 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 12 வயதுக்கும் மேற்பட்டவர்களை, உடனடியாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு நியுசிலாந்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

Met. forecasts fair weather except in Sabaragamuwa

ஐ.நா.சபையின் இளைஞர் அலுவல்கள் இலங்கைத் தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது