தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை வழிநடத்தும் 21 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
பின்வரும் கம்பனிகள் உள்ளடங்கலாக “21” கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடாத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பிக்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபராயினும் அவர் தண்டனைக்குரிய குற்றத்தை செய்வதாக, கருதப்படுவாரென்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.