உள்நாடு

தடுப்பூசி முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு

(UTV | கொழும்பு) – கட்டாய தடுப்பூசி மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தடை செய்யும் சட்டத்திற்கு எதிராக இன்று(24) உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவுள்ளதாக சிங்கள ராவயா கட்சி தெரிவித்துள்ளது.

கொவிட் வைரஸிலிருந்து தப்பிக்க எந்தவொரு தேர்வு முறையையும் பின்பற்ற உரிமை உள்ளதைப் போலவே, தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று சிங்கள ராவயா வலியுறுத்துகிறது.

எந்த நோயும் இல்லாத அல்லது எந்த மருந்தையும் உட்கொள்ளாத ஒரு நபரிற்கு மிரட்டல் மூலம் தடுப்பூசிகளை ஏற்றுவதை மேற்கொள்ளக்கூடாது என்றும், அது சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் செய்யப்பட வேண்டும் என்றும் அதனை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் சிங்கள ராவயா தெரிவித்துள்ளது.

எவரும் தங்கள் விருப்பப்படி ஒரு மருத்துவ முறையை ஏற்கவோ அல்லது மறுக்கவோ தனிநபருக்கு ​​உரிமை உண்டு என குறித்த கட்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

    

Related posts

புல்மோட்டை கிராம மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு!

அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிடும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

2024 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வெளியீடு – நிதி அமைச்சு.