உள்நாடு

தடுப்பூசி செலுத்தியோருக்கு மாத்திரமே பேருந்துகளில் பயணிக்கலாம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர், தனியார் பேருந்துகளில் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, பயண தடை தளர்த்தப்படும் பட்சத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு மாத்திரம் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நோய் பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

   

Related posts

இந்திய விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை குறித்து புலனாய்வு பிரிவு விசாரணை – விஜித ஹேரத்

editor

ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்