உள்நாடு

தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கவும்

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 தடுப்பூசிகளைக் இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த செயல்முறையை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அதன் தலைவர் உபுல் ரோஹான குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தடுப்பூசிகளின் பயன்பாட்டை அதிகரிக்க இதுபோன்ற முறைகள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களிலிருந்து ஏராளமான கொவிட்-19 நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், தடுப்பூசி போடுவதில் அத்தகைய இடங்களின் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

 

Related posts

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் களத்தில்!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் தயார்