உள்நாடு

தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது

(UTV | கொழும்பு) – தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இனிமேல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என்றும், அதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களாக கணிக்கப்படுவர்.

தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமலிருக்க எவருக்கும் உரிமை உள்ளது.

எனினும் பிறருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதால் அனைவரும் பொறுப்புடன் தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் – சாலிய பீரிஸ்.

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு இறுக்கமான சட்ட நடவடிக்கை