உள்நாடு

தங்க பிஸ்கட்களுடன் நபரொருவர் கைது

(UTV| கொழும்பு ) – சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்​ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 121 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 12,874,848 ரூபா பெறுமதியான 1 கிலோ 400 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தங்க பிஸ்கட்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு 13 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!

புதிய அரசுக்கு ஆதரவு வழங்குமாறு ‘வியத்மக ‘ அமைப்பிடம் கோரிக்கை

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு