தங்காலை – மாத்தறை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.
பஸ் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் பஸ் தரிப்பிடத்தில் வைத்து குறித்த பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட வேளையில் பஸ் மோதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திக்வெல்லவில் இருந்து தங்காலை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் மோதியே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.