உள்நாடு

தங்கம் பவுன் ஒன்றுக்கான விலை ரூ.140,000 தாண்டியது

(UTV | கொழும்பு) –  இலங்கையில் தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது.

கொழும்பு ஹெட்டி வீதியிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 141,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக உயர்ந்துள்ளதாக ஹெட்டிவீதி தங்க ஆபரண தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலேயே இதுவரை பதிவு செய்யப்பட்ட தங்கத்தின் அதிகபட்ச விலை இதுவாகும்.

Related posts

‘கொழும்பு கடற்படை பயிற்சி 2021’ ஆரம்பம்

STF முகாம்கள் 3 தனிமைப்படுத்தலுக்கு

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்