உள்நாடு

தங்கம் கடத்தி வருவது தொடர்பான சுற்று நிருபம் பற்றிய புதிய தகவல்

(UTV | கொழும்பு) –  தங்கம் கடத்தி வருவது தொடர்பான சுற்று நிருபம் பற்றிய புதிய தகவல்
24 கரட் தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பிலும் கடத்தப்படுவதை தடுக்கத் தேவையான சுற்றுநிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

✔ தங்கக் கடத்தல்காரர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 100,000,000 அமெரிக்க டொலர்ஏற்றப்படுவதாகவும், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு தங்கம் கொண்டு வரப்படுகின்றமையே சித்தத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
✔ இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், இந்த தங்கக் கடத்தல்காரர்கள் ஒரு மாதத்தில் பாரியளவிலான பணத்தை மோசடி செய்து நாட்டுக்குள் தங்கத்தைக் கொண்டு வருகின்றனர்.
✔ தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 24 கரட் தங்கக் கடத்தலை தடுக்கத் தேவையான சுற்றுநிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.
எனினும், ✔ வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு இலங்கைக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் சட்ட ஏற்பாடுகள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் தங்க கடத்தல்காரர்கள் கொண்டு வந்த 40 கோடி ரூபாவுக்கு மேலான தங்கக் கையிருப்பு
கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில் இது இரண்டாவது பெரிய தங்கள் கடத்தல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்