உள்நாடுவணிகம்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

(UTV | கொழும்பு) –  தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!
இன்றைய தங்கத்தின் விலை விபரம்

இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது

அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த கிழமைகளில் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் காரணி
இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹட்டன் – டிக்ஓயா ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா

பாண் விலையில் இன்று மாற்றம்