உலகம்

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி

(UTV | கொங்கோ ) – மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா தங்க சுரங்கத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நடவடிக்கையும் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு

தென்கிழக்காசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்!