உலகம்

ட்ரம்ப் இனது ‘முத்தமிடும் ஆசை’

(UTV | அமெரிக்கா) – புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய போது ‘அனைவரையும் முத்தமிட வேண்டும்’ என டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா இருந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு கொரோனா குணமானதாக ட்ரம்ப் மற்றும் மெலனியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள்.

பிறகு கொரோனா குறித்து பேசிய ட்ரம்ப், கொரோனா கொடியது என்று மக்கள் பயப்பட தேவையில்லை. அது சீசனுக்கு வரும் காய்ச்சல் போன்றதுதான் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து தற்போது அவர் நான் சக்திவாய்ந்தவராக உணருகிறேன். அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன் என ட்ரம்ப் புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

யாரும் அமெரிக்கா நோக்கி வர வேண்டாம் : பைடன் திட்டவட்டம்

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”