விளையாட்டு

டோனியின் சாதனையை முறியடித்த அலிசா ஹீலே

(UTV | பிரிஸ்பேன்) – சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை இந்திய முன்னாள் விக்கெட் காப்பாளர் அலிசா ஹீலே டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார்.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்திலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் விக்கெட் காப்பாளர் அலிசா ஹீலே இவ்விரு ஆட்டங்களிலும் சேர்த்து 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்தார். இதையடுத்து 20 ஓவர் போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டம் இழக்கச் செய்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக (114 ஆட்டத்தில் 42 கேட்ச், 50 ஸ்டம்பிங்) உயர்ந்தது.

30 வயதான அலிசா ஹீலே, ஆஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற டோனி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் 91 பேரை (98 ஆட்டத்தில் 57 கேட்ச் மற்றும் 34 ஸ்டம்பிங்) ஆட்டம் இழக்கச் செய்துள்ளார்.

Related posts

ஷாகித் அப்ரிடியால் பெற முடியாத சாதனையை எலிஸ் பெர்ரி பெற்றார்

முதலாவது அரையிறுதி போட்டி இன்று

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் இரத்து