சூடான செய்திகள் 1விளையாட்டு

டோனியால் தொடர்ந்து விளையாட முடியுமா? – கிரிக்கெட் வாரியம்

(UTV|COLOMBO)- டோனிக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சியிருப்பதாகவே கருதுவதாக என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக உறுப்பினரான டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக உறுப்பினருமான டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,உலக கிண்ணத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. துரதிர்ஷ்டவசமாக அரைஇறுதி போட்டி சென்று ஏமாற்றத்தில் முடிந்து விட்டது. போட்டியில் ரவீந்திர ஜடேஜாவும், டோனியும் அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடிய விதம் பாராட்டதக்கது.

இந்த உலக கிண்ண தொடர் முழுவதும் டோனி விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விஷயம். இந்த முடிவை அவர் மட்டுமே எடுக்க முடியும். அவரது உடல் ஒத்துழைப்பு தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனாலும் அவருக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சியிருப்பதாகவே கருதுகிறேன். என்றார்.

இதற்கிடையே இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த பேட்டியில், ‘டோனியின் ஓய்வு தொடர்பாக நிறைய தகவல்கள் வருகின்றன. ஆனால் ஓய்வு விஷயத்தை அவரது முடிவுக்கே விட்டு விட வேண்டும். யூகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்த்து அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்கு ஒவ்வொருவரும் மரியாதை கொடுக்க வேண்டும்’ என்றார்.

Related posts

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை இரகசியப் பொலிஸாரிடம்

கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்க விசேட கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்