விளையாட்டு

டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸி.

(UTV|AUSTRALIA)- நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த மூன்றாம் திகதி சிட்னியில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 454 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் 198 ஓட்டம் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டிக்ளே செய்தது.

இந் நிலையில் 416 ஓட்டம் என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 279 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூஸிலாந்தை வெள்ளையடிப்பு செய்தது.

Related posts

இன்று இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை அணியின் முழு விபரம்

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

இலங்கை அணி வெற்றி