விளையாட்டு

137 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி

(UTV|COLOMBO) – தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நான்காம் நாளான இன்று தென்னாபிரிக்காவுக்கு பாலோவன் வழங்கியது. தொடர்ந்து விளையாடிய தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை செய்யும் முதல் அணி இந்தியா ஆகும்.

Related posts

ஏஞ்சலோ மேத்யூஸ் தாயகம் திரும்பினார்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?