உலகம்

டெல்லி வன்முறை- 7 பேர் உயிரிழப்பு

(UTV|இந்தியா )- டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது.

இந்த வன்முறையில் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சிஏஏ போராட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் டெல்லியில் உள்ள நிலையில், சிஏஏ போராட்ட வன்முறை தீவிரமடைந்துள்ளது. டிரம்ப் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்ய தீர்மானம்

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!

ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதலுக்கு IS பொறுப்பேற்பு