உலகம்

டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் – பலர் பலி

புதுடெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

இதில் 11 பெண்கள் மற்றும் 04 குழந்தைகளும் அடங்குவதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் கூடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

அலஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொரோனாவை தொடர்ந்து ‘டெல்டா’

உலக சுகாதார நிறுவனத்தினால் அவசர நிலை