விளையாட்டு

டெல்லி தலைமை அஷ்வினுக்கு

(UTV |  புதுடெல்லி) – ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடாத நிலையில் டெல்லி அணிக்கு கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக உள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவருக்கு ஆபரே‌ஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனால் அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனுபவ வீரர்களான அஸ்வின், ரகானே, சுமித் ஆகியோரின் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Related posts

போட்டியில் இருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்…

முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2021 சீசனில் டோனி விளையாடுவார் – ஸ்ரீனிவாசன்