டெல்லியில் இன்று (17) அதிகாலை 5.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்
4 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் பல பகுதிகளிலும், நொய்டா மற்றும் குர்கானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தன.
டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.
டெல்லி பொலிஸார், X தளத்தில் பதிவிட்டு, தேவைப்பட்டால் உதவிக்கு 112 ஐ அழைக்குமாறு டெல்லி மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி தமது எக்ஸ் பக்கத்தில், “அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.