உலகம்

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்

(UTV | ஜெனீவா) – கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார அமைப்பு
மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங்

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் கூறுகையில், டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

அதன் பரவல் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையாக ஆக கூடும். அனைத்து வகையான கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவிவருகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் வழியே 75 லட்சம் மாடர்னா வகை கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

   

Related posts

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில்

3ஆவது முறையாக செயலிழந்தது TWITTER

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம்