உலகம்

டெல்டாவுக்கு சவாலாகும் ‘லாம்ப்டா’

(UTV |  கோலா லம்பூர்,மலேசியா ) – இந்தியாவில் மிக மோசான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையை மீறி புதிதாகக் கண்டறியப்பட்ட லாம்ப்டா கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசியா சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உலக வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து, பின்னர் குறைகிறது. அத்துடன் வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் அடுத்த அலை தாக்குகிறது. இப்படி அலை அலையாகத் தாக்குவதால் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இப்படி அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதே முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை டெல்டா கொரோனாவால் ஏற்பட்டது. இந்த டெல்டா கொரோனா தான் உலகின் பல நாடுகளில் அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ‘லாம்ப்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனைக் கவனிக்கப்பட வேண்டிய கொரோனா என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – ஹமாஸ் தகவல்.

உலகையே சிரிக்க வைத்த சீம்ஸ் நாய் விடைபெற்றது – புற்று நோய் காரணமா?

Breaking news = விஜயகாந்த் காலமானார் !