உள்நாடுவிளையாட்டு

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

(UTV | மெல்பேர்ன்) –  அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற முதல் நிலை வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து செய்யப்பட்டு அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக முதல் நிலை வீரர் நோவக் ஜொக்கோவிச் அவுஸ்திரேலியாவுக்கு பயணமானார்.

கொவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பிக்காததால் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தடுப்பு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், அவரது சட்டத்தரணிகளால் மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தடுப்பூசிக்கு ஜொக்கோவிச் கடந்த ஆண்டு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் வருமானம் அதிகரிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு