விளையாட்டு

டென்னிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்

(UTV|AMERICA)-உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வேரே (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-வது இடத்தில் தொடருகிறார். குரோஷியா வீரர் மரின் சிலிச் 2 இடம் சரிந்து 7-வது இடம் பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 2 இடம் ஏற்றம் கண்டு 8-வது இடமும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 2 இடம் சறுக்கி 9-வது இடமும், விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய செர்பியா வீரர் ஜோகோவிச் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், விம்பிள்டன் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6 இடம் முன்னேறி 4-வது இடமும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 5-வது இடமும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-வது இடமும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 4 இடம் சரிந்து 7-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் சறுக்கி 8-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 9-வது இடமும், ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜெஸ் 3 இடம் முன்னேறி 10-வது இடமும் பிடித்துள்ளனர். விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அரையிறுதியில் சாய்னா தோல்வி

ஹேஷா விதானகேவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

50 விக்கெட்டுக்களை வீழ்த்தி பும்ரா சாதனை