உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில், மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 68 வீதம் ஆகும்.

இதேவேளை, டெங்கு நோயால் இவ்வருடம் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 21,646 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

சவூதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூவரின் சடலங்கள்

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு