வகைப்படுத்தப்படாத

டெங்கு நோயால் பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை சிறுவர்களிடையே டெங்கு நோய் விரைவாக பரவிச் செல்வதன் காரணமாக, பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதுகுறித்தான சுற்றறிக்கை இன்னும் இரண்டு தினங்களில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டார்.

இதன்படி, கட்டை காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீள காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரமுடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சுகாதார அமைச்சின் புள்ளிவிரப்படி கடந்த 7 மாதங்களில் மாத்திரம் 77 ஆயிரத்து 222 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்