வகைப்படுத்தப்படாத

டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் விசேட செயற்றிட்டம் – சுகாதார அமைச்சு

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் 12 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரம் அடைந்துள்ளதனால் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் விசேட செயற்றிட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு அமுல்படுத்தவுள்ளது.

இதனடிப்படையில் பாடசாலை விடுமுறை முடிவடைவதற்கு முன்னர் பாடசாலைகளை சுத்தம் செய்யும் விசேட செயற்றிட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என்று சுகாதாரதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

இந்தத் திட்டம் சுகாதாரதுறை அதிகாரிகள், கல்வியமைச்சு, பொலிஸார், பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக டெங்கு ஒழிப்பு தொடர்பான குழுக்களை பாடசாலை மட்டத்தில் ஸ்தாபித்து அவற்றின் மூலம் மாதாந்த முன்னேற்ற ஆய்வு அறிக்கைகைள பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வீடுகளின் வளாகங்களிலேயே 90 வீதமான டெங்கு நுளம்புகள் பெருகுகின்றன என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இதுவரை இந்த வருடத்தில் நாடாளவிய ரீதியில் 35 ஆயிரத்து 59 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளை திருடிய 2 பேர் கைது

நீர்த்தேக்கங்களில் 38 சதவீதமான நீரே இருப்பதாக தெரிவிப்பு

Former UNP Councillor Royce Fernando before Court today