சூடான செய்திகள் 1

டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நாடு முழுவதும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19,000க்கும் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரிக்காத வண்ணம் சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர மேலும் கூறியுள்ளார்.

Related posts

மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

பாரளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடுகிறது