கேளிக்கை

டுவிட்டரில் இணைவாரா பிரபல நடிகர்

(UTV|INDIA) -நடிகர் அஜித்குமார் டுவிட்டரில் இணைய வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை தங்கள் கருத்துக்களையும் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் விஜய்யும், அஜித்குமாரும் டுவிட்டரில் இல்லை.

இந்த நிலையில் அஜித்குமார் டுவிட்டருக்கு வர வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் எந்த அளவுக்கு அவரது படங்களை விரும்புகிறார்கள் என்பதை அவர் அறிய முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த அழைப்பை ஏற்று அஜித்குமார் டுவிட்டரில் இணைவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Related posts

நடிகையை திருமணம் செய்த இயக்குனர் வேலு பிரபாகரன்

‘பிரண்ட்ஷிப்’ திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியானது [VIDEO]

எமி ஜாக்சனின் திடீர் முடிவு