உள்நாடு

டீசல் மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஒப்புதல்

(UTV | கொழும்பு) –  2021 ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2022 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான 08 மாத காலத்திற்கான டீசல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் மற்றும் மர்பன் மசகு எண்ணெய் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்கல் ஆகியவைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2021 ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2022 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான 08 மாத காலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.05) 1,137,500 பரல்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 பரல்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் சிங்கப்பூர் M/s Petrochina International (Singapore) Pte. Ltd. டுவன இற்கு வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2021 ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2022 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையான 09 மாத காலத்திற்கான மர்பன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் சிங்கப்பூர் M/s Conscio Ltd, Nigeria இற்கு வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

நாட்டின் பொருளாதாரம் எந்த திசையில் உள்ளது என்பது தெளிவாகிறது

ஜனாதிபதி ரணிலின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

editor

மேலும் 480 பேர் பூரணமாக குணம்