உள்நாடு

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் பேரூந்து, ரயில் சேவையில் சிக்கலில்லை

(UTV | கொழும்பு) –  தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேரூந்து உரிமையாளர்களால் சேர்க்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சேவைக்கு சேர்க்கப்பட்ட பேரூந்துகளில் 15 தொடக்கம் 20 வீதமான பேரூந்துகளே தற்போது சேவையில் ஈடுபடுவதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு நேரடியாக பேரூந்து தொழிற்துறையை பாதிப்பதோடு பேரூந்து பயணிகளையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய டீசல் தட்டுப்பாட்டினால் புகையிரத சேவைகள் பாதிக்கப்படவில்லை என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, வரவிருக்கும் ரயில்களுக்குத் தேவையான டீசல் ரயில்வே துறையிடம் போதுமான அளவு இருப்பு உள்ளது என்றார் அவர்.

Related posts

ஹிருணிகாவின் பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதி

ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடியாணை பெறுமாறு ஆலோசனை

டொலரின் பெறுமதி 265 ரூபாயாக உயர்வு