விளையாட்டு

டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறியது

(UTV |  மெல்போர்ன்) – இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (21) போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

அயர்லாந்துக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், மேற்கிந்திய அணி வெளியேறி, இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் சூப்பர் 12 சுற்றுக்கு அயர்லாந்து தகுதி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்தது.

பதில் இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணி 17.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதன்படி, 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதல் சுற்றில் இருந்து வெளியேற வேண்டும்.

Related posts

அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்

இருபதுக்கு 20 தொடர் – இந்திய குழாம் அறிவிப்பு

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி