விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம் – ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

(UTV |  பெர்த்) – டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப்1-ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் அரைஇறுதிக்கு முன்னேற் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related posts

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள்

அணித் தலைவர் பதவியில் இருந்து திஸர பெரேரா நீக்கம்

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்