வகைப்படுத்தப்படாத

டிரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்தார் மனைவி

(UTV|AMERICA)-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார்.

இருவருமே 40 வயதை எட்டியுள்ள நிலையில் இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று மனம் ஒத்து பிரிய இருப்பதாக இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 12 ஆண்டுகள் மணவாழ்க்கையை முறித்துக்கொண்டு அவரவர் வழியில் பயணிக்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோர்ட்டில் வனேஸ்ஸா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் ஐந்து குழந்தைகள் மற்றும் டிரம்ப் ஜூனியரின் சொத்துக்களை உரிமை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இதனால், ஐந்து குழந்தைகளும் டிரம்ப் வசம் வளரும் என கூறப்படுகிறது.
எனினும், இது தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது டிரம்ப் நிறுவனமோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

காருக்கு அடியில் சிக்கி சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்-(VIDEO)

One-day service by Monday – Registration of Persons Dept.

රුහුණු විශ්වවිද්‍යාලයේ පීඨ කිහිපයක අධ්‍යයන කටයුතු අද ඇරඹේ