கேளிக்கை

எஸ்.பி. தொற்றில் இருந்து மீண்டார்

(UTV | கொழும்பு) –  பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகனான எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங் மீது பொலிசில் முறைப்பாடு

இந்தியன் 2 படத்தில் அபிஷேக் பச்சன்?