உள்நாடு

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75 வீதத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியமைக்கான டிஜிட்டல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

 

Related posts

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு

மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு IMF இன்றுஅனுமதி ?

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்