கேளிக்கை

டிசம்பர் 21 மாரி 2 ரிலீஸ்

(UTV|INDIA)-வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’ உருவாகி இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆனது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்திருக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி  வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

200 கோடி பட்ஜெட்டில் நயன்தாரா

மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா

‘இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன்..’ – பூஜா